பிளாய்டுக்கு இரங்கல் தெரிவித்த டிரம்ப் வீடியோவை நீக்கியது டிவிட்டர்: மோதல் மேலும் அதிகரிப்பு

வாஷிங்டன்:  டிவிட்டர் நிர்வாகத்திற்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. டிரம்ப்பின் சில பதிவுகளை டிவிட்டர் தடை செய்துள்ளது. இதுபோன்று வேறெந்த அமெரிக்க அதிபர்களுக்கு எதிராகவும் டிவிட்டர் நடந்து கொண்டதில்லை. இந்நிலையில், அமெரிக்காவில் கழுத்தை காலால் மிதித்து கருப்பினத்தை சேர்ந்த  ஜார்ஜ் பிளாய்ட்டை போலீசார்  கொன்றதால், பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில், பிளாய்ட்     மறைவு தொடர்பாக டிரம்ப் ஒரு இரங்கல் வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.  

Advertising
Advertising

அதில் போராட்ட புகைப்படங்கள், அதில் நடந்த வன்முறை புகைப்படங்களுக்கு பின்னணியில் டிரம்ப்  உருக்கமாக பேசுகிறார். ‘பிளாய்ட் மரணம் மிக சோகமானது. நான்  நியாயமான சமுதாயத்தை நோக்கி இணக்கமாக செயல்படுகிறேன்,’ என கூறுகிறார். ஆனால், அந்த வீடியோவில் காட்டப்பட்ட புகைப்படங்கள் காப்புரிமை பெற்றவை என்பதால்,  அந்த வீடியோவை நீக்குவதாக டிவிட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது, டிரம்ப்-டிவிட்டர் இடையேயான மோதலை அதிகரித்துள்ளது.

Related Stories: