ஹைட்ரோ குளோரோகுயின் மருந்தால் பலி அதிகரிப்பா?

போஸ்டன்: கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரோ குளோரோகுயின் மருந்தால் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பதாக வெளியான சர்ச்சைக்குரிய ஆய்வறிக்கையை லேன்செட் இதழ் திரும்பப் பெற்றது. கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ரோ குளோரோகுயின் மாத்திரை நோயாளிகளுக்கு தரப்பட்டு வருகிறது. உலகின் பெரும்பாலான நாடுகள் இம்மருந்து பலனளிப்பதாக ஏற்றுக் கொண்டுள்ளது. சர்வதேச நாடுகளின் 70 சதவீத ஹைட்ரோ குளோரோகுயின் தேவையை இந்தியா பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில், ஹைட்ரோ குளோரோகுயின் மருந்தால்தான் கோவிட்-19 இறப்புகள் அதிகரிக்கின்றன என பிரபலமான லேன்செட் மருத்துவ இதழ் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இது உலகளவில் கடும் சர்ச்சையை எழுப்பியது.

Advertising
Advertising

 ஹைட்ரோ குளோரோகுயின் மருந்தால் கொரோனா நோயாளிகள் குணமாவதாக மருத்துவ ரீதியாக எந்த நிரூபணமும் இல்லை என்றாலும் கூட, அம்மருந்து நேர்மறையான தீர்வையே தந்து வருகிறது. இதனால், லேன்செட் ஆய்வுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தனது ஆய்வறிக்கையை திரும்பப் பெறுவதாக அந்த இதழின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில், ஆய்வு நடத்திய மருத்துவர்கள், அவர்களுக்கு கிடைத்த முதற்கட்ட புள்ளி விவரங்களின் உண்மைத்தன்மையை உறுதிபடுத்த முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல், சமீபத்தில் நியூ இங்கிலாந்து  இதழ் ஒன்று, இதய நோயுடன் கொரோனா இறப்புகளை சம்பந்தப்படுத்தி வெளியிட்ட ஆய்வை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: