எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்காக தூய்மையாகும் பள்ளி வகுப்பறைகள்: மாணவர்களுக்கு 1.75 லட்சம் மாஸ்க்

திருச்சி: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாஸ்க் தயாரித்து பள்ளிகளில் ஒப்படைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் கொரானா ஊரடங்கு காரணமாக எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முழுவதும் நடைபெறவில்லை. பிளஸ் 1, பிளஸ்2வில் சில தேர்வுகள் நடைபெறவி–்ல்லை. இந்நிலையில் விடுபட்ட பொதுத்தேர்வுகள் மற்றும் எஸ்எஸ்எல்சிக்கான பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் நடைபெறும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். இதையடுத்து பள்ளி வகுப்பறைகளை தூய்மையாக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மேலும், விடுதிகளில் தங்கி பயன்றுவரும் மாணவ, மாணவிகளுக்கும் விடுதிகளில் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருக்க தேர்வு எழுதும் மாணவர்களுக்கு துவைத்து மீண்டும் உபயோகப்படுத்தும் முக கவசம் (மாஸ்க்) தயாரிக்கப்பட்டு வருகிறது. சமூக நலத்துறை மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மகளிர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் முக கவசம் தைத்து தயாரிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்துக்கு மகளிர் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம், காவிரி கூட்டுறவு சங்கம், எழுதுபொருள் மற்றும் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் மூலம் முக கவசம் தைத்து வைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 1.75 லட்சம் முக கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அவை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு மாணவருக்கு 3 முக கவசம் வீதம் வழங்கப்பட உள்ளது.

Related Stories: