ஐநா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா மோதல்

நியூயார்க்: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அவசரக் கூட்டம் நேற்று கூடியது. இதில் ஐநா.வுக்கான அமெரிக்க தூதர் கெல்லி கிராப்ட் பேசுகையில், ``ஹாங்காங் மக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையில் சீன அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை இயற்றி உள்ளது. சீனாவின் இந்த அத்துமீறலை சர்வதேச சட்டம் அனுமதிக்க போகிறதா? மனித உரிமைகளை பாதுகாப்பதில் ஐ.நா. என்ன நிலைப்பாடு எடுக்க போகிறது? சீனாவின் நடவடிக்கை உலகின் வர்த்தக மையமாக விளங்கும் ஹாங்காங்கின் அடிப்படை அரசியல் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் உள்ளது. எனவே, சீனா இதனை திரும்ப பெற அனைத்து நாடுகளும் வலியுறுத்த வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்து சீனாவின் ஐநா.வுக்கான நிரந்தர தூதர் ஜாங் ஜூன் பேசிய போது, ‘‘அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகரில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் போலீசாரால் கொல்லப்பட்டதற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. அமெரிக்காவும், இங்கிலாந்தும் ஹாங்காங் பிரச்னையில் தலையிட்டு பதற்றத்தை ஏற்படுத்துவதை நிறுத்தி விட்டு, தங்கள் வேலையை பார்ப்பது நல்லது. அதை விடுத்து சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டால் தோல்வியை சந்திக்க நேரிடும்’,’ என்றார். இந்த கூட்டத்தில் சீனாவுக்கு ஆதரவாக ரஷ்யா இருந்தது.

Related Stories: