கொரோனா, வெட்டுக்கிளிக்கு மத்தியில் சவுதியில் ‘காகங்கள்’ கூட்டம்?.. இணையத்தில் பழைய வீடியோ வைரல்

புதுடெல்லி: கொரோனா, வெட்டுக்கிளி அச்சுறுத்தலுக்கு மத்தியில் சவுதியில் ‘காகங்கள்’ கூட்டமாக கூடியதாக இணையத்தில் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகளின் பிரச்னை பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்வதால் வட மாநிலங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றன.

Advertising
Advertising

இந்நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள சூப்பர் மார்கெட் முன்பு அதிக எண்ணிக்கையிலான காகங்கள் ஒன்று கூடியதாகவும், இது இயற்கையின் மாறுபாட்டிற்கான அறிகுறி எனவும் பலரும் கருத்து தெரிவித்தனர். அது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைதலங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் நூற்றுக்கணக்கான பறவைகள் ஒன்று கூடி, கார், சாலை போன்றவற்றை ஆக்கிரமித்து பறக்கின்றன. இந்நிலையில், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ தற்போது எடுக்கப்பட்ட வீடியோ இல்லை என்பது தெரியவந்துள்ளது.

அந்த வீடியோ டெக்சாஸில் உள்ள வால்மார்ட் எதிரே 2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ என்றும், அதில் பறப்பது காகம் இல்லை எனவும் கூறுகின்றனர். அங்கு பறந்தது கிராக்கிள் என்ற பறவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவுக்கும் சவுதிக்கும் தொடர்பே இல்லை என்றும் மக்கள் தேவையில்லாமல் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் சிலர் இந்த வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

Related Stories: