காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 361-ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை 204 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார்.