சில்லி பாயின்ட்...

* இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* ஏற்கனவே 2018ல் விளையாட்டுத் துறையின் உயரிய கேல் ரத்னாவை விருது பெற்றவரான முன்னாள் உலக சாம்பியன்  மீராபாய் சானு பெயரை, தற்போது அர்ஜுனா விருதுக்கு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

* பாட்டியாலா மற்றும் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையங்களில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பயிற்சியை தொடங்கி உள்ளனர்.

* ஒலிம்பிக் சேனல் கமிஷன் உறுப்பினராக இந்தியாவின் நரிந்தர் பத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

* வேகப் பந்துவீச்சாளர்கள் ஆக்ரோஷமாகப் பந்துவீசுவதற்கு யாராலும் கற்றுக் கொடுக்க முடியாது. அது இயல்பாக உள்ளிருந்து வெளிப்பட வேண்டும்... என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் நட்சத்திரம் கர்ட்லி அம்ப்ரோஸ் தெரிவித்துள்ளார்.

*  கால்பந்து ஸ்டேடியங்களில் அடுத்த சீசனில் இருந்து ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஸ்பெயின் விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Related Stories: