ட்வீட் கார்னர்... ரசிகர்கள்தான் இன்ஜின்கள்!

கொரோனா அச்சுறுத்தல் ஒரு பக்கம் நீடித்தாலும், விளையாட்டு போட்டிகள் மீண்டும் நடக்கத் தொடங்கி உள்ளன. செக் குடியரசில் அந்நாட்டு வீரர், வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் ‘ஹார்டுகோர்ட் டிரா’ டென்னிஸ் தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் முன்னணி வீராங்கனை பெத்ரா குவித்தோவா, ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். ‘எனக்கு இன்னும் வயது உள்ளது.  ஓரிரு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். ஆனால், சூழ்நிலை இப்படியே தொடர்ந்தால் கிராண்ட்ஸ்லாம்  போட்டியில் விளையாடுவதை தவிர்த்துவிடுவேன்.

Advertising
Advertising

வீரர்களான எங்களுக்கு ரசிகர்கள்தான் இன்ஜின்கள். அவர்கள் தருகின்ற உற்சாகமும், ஆரவார வரவேற்பும் தான் எங்களை விளையாட வைக்கிறது. அந்த ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது எனக்கு அழகாகத் தெரியவில்லை. அப்படி விளையாடும் போட்டிகளை கிராண்ட்ஸ்லாம் என்றும் சொல்ல முடியாது. ரசிகர்கள் இல்லாமல் நடத்துவதை விட அவற்றை ரத்து செய்து விடுவது நல்லது’... என்று குவித்தோவா தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிந்துள்ளார்.

Related Stories: