நேமம் வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூர் ஊராட்சி நேமம், இளநகர் கிராமத்தில் 500 ஏக்கர் சாகுடி நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு உள்ளவடிகால் வாய்க்காலில் கடந்த 2018ம் ஆண்டு தாக்கிய கஜாபுயலில் விழுந்த மரங்கள் அகற்றப்படமால் அப்படியே கிடக்கிறது. இதனால் கடந்த ஆண்டு சாகுபடி நேரத்தில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டும் வடிகால்வாய்க்கால் தூர் வாரவில்லை என்றால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும்.எனவே நேமம் இளநகர் வடிகால் வாய்க்காலை தூர் வரவேண்டும் என்று விவசாயிகள் விடுத்த கோரிக்கை குறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து .வடிகால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து நேமம் கிராம கமிட்டி தலைவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், தினகரன் செய்தியால் நேமம் இளநகர் வடிகால் வாய்க்கால் 10கிமீ தூரம் பொதுப்பணித்துறை சார்பில் தூர்வாரும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகள், கிராம மக்கள் சார்பில் தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

Related Stories: