20 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மந்தநிலை

சிங்கப்பூர்: சிங்கப்பூர் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மந்தநிலையை நோக்கி செல்வதாக இந்நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று அது வெளியிட்ட அறிக்கை:  சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தாண்டு 1 முதல் 4 சதவீதம் வரை குறையும் என்று கணக்கிடப்பட்ட நிலையில், தற்போது 4 முதல் 7 சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2001ம் ஆண்டில் டாட்காம் பிரச்னையின் போது அந்தாண்டு முழுவதும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 1.1 சதவீதமாக சரிந்தது. அதற்கு முன்பு 1998ம் ஆண்டில் ஆசிய நாடுகளில் நிலவிய நிதி சிக்கலின் போது 2.2 சதவீதமாக இருந்தது. இதனால் கட்டுமானம், கடல் மற்றும் கடல் பொறியியல் துறைகள் மனிதவள பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: