மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகின்ற மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிய வாய்ப்பில்லை: முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகின்ற மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிய வாய்ப்பில்லை என்று  அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். நாட்டிலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த மாநிலமான மகாராஷ்டிரா உள்ளது. இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 47,190 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,577 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 13,404 பேர்   குணமடைந்துள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிர மக்களுக்கு ஆன்லைன் நேரலை மூலம்  முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உரையாற்றினார்.

அப்போது அவர், கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்ப்பதாகவும், ஆதலால் ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டார். 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்படுவது குறித்து பேசிய அவர், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியை தொடர்பு கொண்டு, விமான போக்குவரத்தை தொடங்க மேலும் அவகாசம் கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: