கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு.: கடலூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகிவருகிறது. எய்யலூர் கொள்ளிடம் ஆற்றில் ராட்சச ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு கடலூர் நகருக்கு குடிநீருக்காக குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த திட்டம் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்தநிலையில் தீடிரென குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிவருகிறது.

ராட்சச குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கோடை வெயிலில் தாக்கத்தால் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகுவதை தடுக்க அதிகாரிளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>