அமைச்சர் செல்லூர் ராஜூ விழாவில் சமூக இடைவெளி ‘ஆப்சென்ட்’

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்ற விழாவில் சமூக இடைவெளி கேள்விக்குறியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு மருத்துவமனைக்கு இரு வென்டிலேட்டர்கள், மல்டி பேரா மானிட்டர் மற்றும் ஸ்கேன் கருவி உள்ளிட்ட சுமார் ரூ.,22 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை தனியார் அமைப்பினர் நேற்று வழங்கினர். இதற்கான விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றார். கலெக்டர் வினய் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் கொஞ்சமும் சமூக இடைவெளி பேணப்படாமல், கூட்டமாக அருகருகே நின்றனர். அமைச்சர் பங்கேற்ற விழாவில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாதது அனைத்து தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: