பழகிய பெண்களை பட்டியலிட முடியாது: காசி பகீர் வாக்குமூலம்

நாகர்கோவில் : ஏராளமான பெண்களுடன் நான் பழகி உள்ளேன். எத்தனை பேர் என்று என்னால் பட்டியலிட முடியாது. தேவையில்லாமல் புகார் அளித்தவர்களை அழைத்து கேளுங்கள் என்று காசி கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் உள்பட ஏராளமான இளம்பெண்களிடம் சமூக வலை தளங்களில் பழகி அவர்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய வழக்கில், நாகர்கோவில், கணேசபுரத்தை சேர்ந்த காசி என்ற சுஜி(26) என்பவரை 2ம் கட்டமாக 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்டமாக 3 நாள் நடந்த விசாரணையில் பெரிய அளவிலான தகவல்களை பெற முடியவில்லை. இதையடுத்து, 2 ம் கட்டமாக காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். இதுவரை 2 நாள் விசாரணை முடிந்துள்ளது. ஏற்கனவே கைப்பற்றப்பட்ட லேப்டாப் மற்றும் பென் டிரைவில் இருக்கும் வீடியோக்களில் உள்ள பெண்கள் குறித்து காசியிடம் கேட்டனர். அப்போது மிகவும் குஷியாக பேச தொடங்கி உள்ளார். ஏராளமான பெண்கள் என்னிடம் தாராளமாக பழகி உள்ளனர். எத்தனை பெண்கள் என்று என்னால் பட்டியலிட முடியாது. நானாக யாரையும் சென்று ஏமாற்றவில்லை. என்னிடம் வந்தவர்களுடன் நான் ஜாலியாக இருந்தேன். பண தேவைக்காக சில பெண்களின் நட்பை பயன்படுத்திக் கொண்டேன். யாரையும் திருமணம் செய்து கொண்டு நான் ஏமாற்றவில்லை. என்னுடைய பேச்சு, உடலமைப்பை பார்த்து பெண்களாகவே எனது வலையில் வீழ்ந்தனர்.

என்னை பற்றி தேவையில்லாமல் புகார் அளித்துள்ள பெண்களிடம் கேளுங்கள். நான் அவர்களை ஏமாற்றினேனா என்று? என கூறி உள்ளார். மேலும் சில பெண்களிடம் பழகியது பற்றி காசி கூறியதை கேட்டு விசாரணை நடத்திய போலீசாரே அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘காசி மீது இதுவரை 6 வழக்குகள் உள்ளன.  புகார் அளித்த பெண்ணை எப்படி தெரியும். எத்தனை நாள் பழக்கம் என்பன போன்ற கேள்விகளுக்கு காசி பதிலளித்துள்ளார். வீடியோவில் இருந்த சில பெண்களிடம் விசாரிக்க முடிவு செய்து போன் செய்தோம். ஆனால் அவர்கள் பேச மறுத்து விட்டனர். தற்போது அவர்கள் குடும்பம், குழந்தைகள் என இருக்கிறார்கள். இந்த நேரத்தில் கட்டாயப்படுத்தி அவர்களை விசாரணைக்காக அழைத்தால் சிக்கலாக மாறி விடும். பெண்கள் தாங்களாகவே வந்து புகார் அளிக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories:

>