ஈரோடு அக்ரஹாரத்தில் சாயக்கழிவுகள் ஆற்றில் கலப்பது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

ஈரோடு: ஈரோடு அக்ரஹாரத்தில் இயங்கி வரும் சாய பட்டறைகளில் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ள்ளனர். சாயக்கழிவுகள் காவிரி ஆற்றில் கலப்பதை சன் நியூஸ் தொலைகாட்சி நேற்று ஆதாரத்துடன் செய்தியாக வெளியிட்டுள்ள நிலையில் தற்போது அதிகாரிகள் சாயப்பட்டறைகளில் அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு நகரை பொறுத்தவரையில் பல்வேறு சாயப்பட்டறைகள் மற்றும் தோல் தொழிற்ச்சாலைகள் இயங்கி வருகின்றன. ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக இந்த சாயப்பட்டறைகள் மற்றும் தோல் தொழிற்ச்சாலைகள் அனா அனைத்து ஆலைகளுமே மூடப்பட்டிருந்தன.

இதனால் இந்த ஆலைகளில் இருந்து வரக்கூடிய கழிவு நீர் முற்றிலுமாக தடை பட்டிருந்தது. இதனால் காலிங்கராயன், காவிரி ஆறு ஆகியவை 80% அளவுக்கு சுத்தமான நீராக மாறியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சியோ நீண்ட நாட்களாக நீடிக்கவில்லை. ஊரடங்கின் தளர்வாக சில தினங்களுக்கு முன்பாக இந்த ஆலைகளை திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. இதனையடுத்து தற்போது இரு சில நிறுவனங்கள் மீண்டும் இயங்க தொடங்கின. இது போன்ற சாயப்பட்டறைகள் இயங்க தொடங்கிய ஓரிரு தினங்களிலேயே சாயக்கழிவு நீரானது மீண்டும் அங்கு இருக்க கூடிய ஓடைகள் வழியாக வெளியேற்றப்பட்டு காவிரியில் கலக்க கூடிய சூழல் உருவானது.

இது தொடர்பாக முழுமையான விவரங்களுடன் நேற்று சன் நியூஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. இதனையடுத்து தற்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு பணியை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக அக்ரஹாரம், ஆரன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வரக்கூடிய தண்ணீரை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பகுதியில் இயங்க கூடிய சாயப்பட்டறைகளையும் நேரில் பார்த்து ஆய்வு செய்தனர். மேலும் இந்த தண்ணீரில் ஏதேனும் நச்சு ரசாயன பொருட்கள் கலந்துள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யவதற்காக இந்த நீரை மாதிரியாக எடுத்து சென்றிருக்கின்றனர்.

Related Stories: