‘சாய்’ மைய சமையல்காரர் கொரோனாவுக்கு பலி

டோக்கியோ  ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த ஹாக்கி வீரர்கள், வீராங்கனைகள், தடகள வீரர்கள் என 30 பேர் பெங்களூருவில் உள்ள  இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) சிறப்பு மையத்தில் தங்கி பயிற்சி பெற்று வந்தனர். இந்நிலையில் இந்த  மையத்தின் சமையல்காரர் ஒருவர்  2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

இது குறித்து அதிகாரி கூறுகையில், ‘ உயிரிழந்த சமையல்காரருடன் இருந்த 4 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.  மேலும்  சமையல்காரர் இறந்த மறுநாள்தான் அவருக்கு கொரோனா தொற்று  இருப்பது உறுதி செய்யப்பட்டது.  மாரடைப்பு காரணமாகத்தான் உயிரிழந்துள்ளார் என்றாலும் மையத்தில் உள்ள அனைவரையும் சோதிக்க  உள்ளோம்’ என்றார்.

Related Stories: