'கொரோனா ஒன்றும் வேகமாக பரவும் பெருந்தொற்று இல்லை...மூடப்பட்ட வணிக வளாகங்களை உடனே திறக்குக' : பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்

இஸ்லாமாபாத் : கொரோனா ஒன்றும் வேகமாக பரவும் பெருந்தொற்று இல்லை என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் கொரோனாவால் இதுவரை 45 ஆயிரத்து 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 985 பேர்  உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பொது நல மனு ஒன்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது,

இந்த மனு, பாகிஸ்தான் தலைமை நீதிபதி (சி.ஜே.பி) குல்சார் அகமது, நீதிபதிகள் உமர் அட்டா பண்டியல், மஜார் ஆலம் கான் மியன்கெல், சஜ்ஜாத் அலி ஷா மற்றும் காசி முஹம்மது அமீன் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, கொரோனாவை தடுப்பதற்காக அதிகமாக பணம் செலவழிப்பது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஊரடங்கால் மூடப்பட்ட வணிக வளாகங்களை உடனே திறக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டால் வார இறுதியில் மட்டும் வர்த்தக நிறுவனங்கள் செயல்படவும் அனுமதிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: