விற்பனை இல்லை.. ஆனாலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் : சவரனுக்கு ரூ. 416 அதிகரித்து ரூ.36,288க்கு விற்பனை!!

சென்னை : தங்கம் விலை சவரனுக்கு மீண்டும் 36 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மார்ச் 24ம் தேதிக்கு முன்னர் சவரன் தங்கம்  31,616க்கு விற்கப்பட்டது. அதாவது மார்ச் 23ம் தேதி இந்த விலையில் விற்கப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் நகைக்கடைகள் மூடப்பட்டது. இருந்த போதிலும் நகை விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது.  இந்த நிலையில் தற்போது ஏசி இல்லாத நகைக்கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் சவரன் தங்கம் விலை 36 ஆயிரத்து 624 ரூபாயாக இருந்த நிலையில் நேற்று 35 ஆயிரத்து 872 ரூபாயாக சரிந்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது.நேற்று 4 ஆயிரத்து 484 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கம் விலை இன்று 52 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 536 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ஒரு சவரன் தங்கம் விலை 416 ரூபாய் அதிகரித்து 36 ஆயிரத்து 288 ரூபாயாக உள்ளது.ஒரு கிலோ வெள்ளியின் விலையும் நேற்று 51 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்த நிலையில் இன்று ஆயிரத்து 200 ரூபாய் அதிகரித்து 52 ஆயிரத்து 700 ரூபாயாக உயர்ந்துள்ளது. 

Related Stories: