கொரோனா பரவல் குறித்து கோவையில் ஆய்வு

கோவை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குழுவினர் தமிழகம் உள்பட நோய் தொற்று அதிகமாக உள்ள 75 மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளனர். 12 பேர் அடங்கிய குழுவினர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர் உள்பட 10 இடங்களில் ஆய்வு செய்கின்றனர். நேற்று  ஊரக பகுதிகளில் 200 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.  இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறுகையில், ‘கோவை மாவட்டத்தில் சமூக பரவல் குறித்தும், பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி அறிந்து கொள்ளவும் ஆய்வு செய்கின்றனர்’ என்றார்.

Related Stories: