செவித்திறன், பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு உதடு மறைக்காத சிறப்பு முகக்கவசம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: செவித்திறன் மற்றும் வாய்பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு தகவல் பரிமாற்றம் செய்ய வசதியாக உதடு மறைவற்ற முகக்கவசம் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த காலங்களில் செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுடன் பெற்றோர், பாதுகாவலர், பயிற்சியாளர்கள், உடன் பணிபுரிபவர்கள் உரையாடும் சமயம் செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் முகத்தின் உதடசைவு மூலம் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்படும்.

அவர்களுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட உதடு மறைவற்ற முகக்கவசங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 12.15 லட்சம் செலவில் 13,500 செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு 81,000 எண்ணிக்கையிலான உதடு மறைவற்ற முகக்கவசங்கள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: