மத்திய அரசின் நான்காம் கட்ட ஊரடங்குமாநில அரசுகளின் நிலை என்ன?

புதுடெல்லி: நான்காம் கட்டமாக ஊரடங்கை நீடிக்கலாமா என்பது தொடர்பாக மாநிலங்களிடம் கேட்கப்பட்ட பரிந்துரையில் சில மாநிலங்களே ஊரடங்கை நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளன. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. தொற்று பாதிப்பில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா நேற்று முன்தினம் முன்னேறியுள்ளது. இந்தியாவில் ேநற்று வரை 2752 பேரை காவு கொண்ட கொரோனா, 86 ஆயிரம் பேரை தாக்கியுள்ளது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கையையும் மீறி பாதிப்பு விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

3 கட்டமாக அமல்படுத்தியிருந்த 54 நாள் ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில அனைத்து மாநில முதல்வர்களும் ஊரடங்கு தேவையா என்பது குறித்து பரிந்துரை வழங்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டிருந்தார். இதில் சில மாநிலங்கள் மட்டும் ஊரடங்கை நீடிக்க வேண்டும் என்ற மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன. பெரும்பாலான மாநிலங்கள் கட்டுப்பாட்டை தளர்த்தவேண்டும் என்றும் தற்போது மத்திய அரசு முடிவு செய்து வரும் சிவப்பு, ஆரஞ்ச், பச்சை கொரோனா மண்டலங்களை மாநில அரசுகளே முடிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளன. அதிக பாதிப்புள்ள மகாராஷ்டிரா, 2ம் இடத்தில் உள்ள குஜராத், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசுக்கு வழங்கியுள்ள பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாவது:

மகாராஷ்டிரா

* கடுமையான ஊரடங்கு உத்தரவை அதிக பாதிப்புள்ள மும்பை ெமட்ரோபாலிட்டன் பகுதி, புனே, சோலாப்பூர், அவுரங்காபாத், மாலேகான் பகுதியில் இந்த மாத இறுதி வரை நீடிக்க வேண்டும்.

* மாநிலம் விட்டு

மாநிலம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு இயக்கப்படும் அனைத்து போக்குவரத்தையும் முழுவதுமாக நிறுத்தவேண்டும்.

டெல்லி

* சந்தைகள், ஷாப்பிங் மால்களை திறக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

* பஸ்கள் மற்றும் மெட்ரோ ரயில்களை சமூக இடைவெளி விதிமுறையை பின்பற்றி இயக்கலாம்.

குஜராத்

* முக்கிய நகரங்களில் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க வேண்டும்.

* வேலைக்கு செல்ல அனுமதிக்கப்படாததால் பொதுமக்கள் மற்றும் அவர்களது குடும்பம் பேரழிவை சந்தித்து வருவதால் பொருளாதார நடவடிக்கை மிக அவசியம்.

கேரளா

* கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நடவடிக்கையை தொடங்க அனுமதிக்க வேண்டும்.

* உள்நாட்டு விமான சேவை, மாநிலத்துக்குள் பஸ் சேவையை குறைந்த அளவு பயணிகள் மற்றும் சமூக இடைவெளியுடன் தொடங்கலாம்.

பீகார்

* இந்த மாத இறுதிவரை கொரோனா ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்

* வெளிமாநிலத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் ஷார்மிக் சிறப்பு ரயில்களை தொடர்ந்து இயக்க வேண்டும். மற்ற ரயில்களை ஊரடங்கு முடியும் வரை இயக்ககூடாது.

தமிழ்நாடு

*  வரும் 31ம் தேதி வரை விமானங்கள் மற்றும் ரயில் சேவையை இயக்க கூடாது.

* பஸ் போக்குவரத்தை இயக்க விருப்பமில்லை என மாநில அரசு  அறிவிப்பு

அரியானா

* கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீடிக்க வேண்டும்.

* அரசு அலுவலகங்கள் 50% அல்லது அதற்கு குறைவான ஊழியர்களுடன் இயக்கப்பட வேண்டும்

* சிவப்பு மண்டல பகுதியில் கடும் கட்டுப்பாடுகள்

ஜார்க்கண்ட், ஒடிசா

*  புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதால் அவர்கள் பயணம் செய்வதை கட்டுப்படுத்த வேண்டும். ஊரடங்கையும் நீடிக்கவேண்டும்.

மேற்கு வங்கம்

* கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீடிக்க வேண்டும்.

* கொரோனா பாதிப்பு மண்டலங்களான சிவப்பு, பச்சை, ஆரஞ்சை முடிவு செய்வதில் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்.

Related Stories: