புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடன் ராகுல் பேச்சு: பிரச்னைகளை கேட்டறிந்தார்

புதுடெல்லி: புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் ராகுல் காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்களின் பிரச்னைகளை அவர் கேட்டறிந்தார்.F

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக இருக்கிறது. கொரோனா பரவலின்போது மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அது தற்போது மூன்று முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், மேலும் அது நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கான நெறிமுறைகள் இன்று அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தொடர்ந்து ஊரடங்கால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த ெதாழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இதனால் உண்ண உணவு, தங்க இடம் எதுவுமின்றி, உயிர்பிழைத்தால் போதும் என்ற நிலைக்கு அவர்கள் வந்துள்ளனர். இதனால் நடந்தாவது, ஊருக்கு சென்றுவிடலாம் என்று நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தினமும் சொந்த ஊர்களுக்கு கிளம்பி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு தேவையான வாகன வசதிகளை செய்து தருவதை விடுத்து, அவர்களை மீண்டும் முகாம்களுகுகு கொண்டு சென்று அடைக்கும் நிலைதான் உள்ளது. இதை எதிர்த்து கிளம்புபவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டுகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு கிளம்பிய புலம் பெயர்ந்த தொழிலாளர்களை காங்கிரஸ் மு்ன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று சந்தித்து உரையாடினார். டெல்லியில் உள்ள சுக்தேவ் விஹார் மேம்பாலம் அருகே இந்த தொழிலாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். தாங்கள் கடந்த 53 நாட்களாக உணவுக்காக ஏங்கிக்கிடப்பதாகவும், உழைத்து சம்பாதித்த தாங்கள் இப்போது பிச்சைக்காரர்கள் போன்று உணவுக்காக மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் புலம்பினர். தாங்கள் உயிர்பிழைத்தால் போதும் என்பதால்தான் சொந்த ஊருக்கு கிளம்பிச் செல்வதாகவும் கூறினர்.

Related Stories: