துப்புறதுக்கு கொஞ்சம் தடை விதிங்க ப்ளீஸ்...மன்றாடும் மத்திய அமைச்சர்

புதுடெல்லி: அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று எழுதியுள்ள கடித‍ம் வருமாறு:

 புகையிலை, பாக்கு பயன்பாட்டின் போது வாயில் உமிழ்நீர் சுரப்பதால் அவற்றை பயன்படுத்துபவர்கள் தங்களையும் அறியாமல் பொது இடங்களில் எச்சில் துப்புகின்றனர். இதனால் கொரோனா, காசநோய், பன்றி காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் ஆபத்து அதிகமாக உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் பொது இடங்களில் புகையிலை சுவைப்பதையும், எச்சில் துப்புவதையும் தவிர்க்கும்படி அறிவுறுத்தி உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகமும் கடந்த 1ம் தேதி வெளியிட்ட புதிய விதிகளின் கீழ், பொது இடங்களில் புகையிலை போடுவது, எச்சில் துப்புவது தண்டனைக்குரியது என்று தெரிவித்துள்ளது. மாநில, யூனியன் பிரதேச அரசுகள் இவற்றுக்கு தடை விதிப்பதின் மூலம் தூய்மையான இந்தியாவை மட்டுமல்ல ஆரோக்கியமான இந்தியாவையும் உருவாக்க முடியும். ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மாநில அரசுகள் அவசர சட்டம் இயற்றி பொது இடங்களில் பான், குட்கா, புகையிலை ஆகியவற்றை விற்க தடை விதித்துள்ளன. இதை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: