தெலுங்கில் ஹேப்பி டேஸ் படத்தில் ஹீரோவாக நடித்தவர் நிகில் சித்தார்த். இவர் டாக்டர் பல்லவி வர்மா என்பவரை காதலித்து வந்தார். கடந்த பிப்ரவரி 1ம் தேதி இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. ஏப்ரல் 16ம் தேதி வெளிநாட்டில் திருமணத்தை நடத்த திட்டமிட்டனர். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நிகில் தனது திருமணத்தை தள்ளிவைத்தார்.