டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள் மும்முரம்: திருச்சியில் தீயா வேலை செய்றாங்க குமாரே...

திருச்சி: டாஸ்மாக்கை திறக்க கோரிய வழக்கில் இன்று அரசுக்கு சாதகமான தீர்ப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பில் உள்ள அதிகாரிகள் ஊழியர்களை அழைத்து கடையை திறக்க தயாராக இருக்கும்படியும், குடிமகன்களுக்கு 7 நாட்களுக்கு ஒவ்வொரு கலர் டோக்கன் வழங்க ஊழியர்களிடம் டோக்கன் வழங்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என உத்தரவையடுத்து திருச்சியில் 163 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. முதல் இரண்டு நாளில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக்கில் குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது.

சமூக இடைவெளியே கேள்வி குறியானதால், கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் மாநில முழுவதும் டாஸ்மாக்கை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, டாஸ்மாக் கடைகள் அனைத்தும் 8ம் தேதி பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் டாஸ்மாக் குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று விசாரிக்கப்படுகிறது. இதில், எப்படியும் கடையை திறக்க உத்தரவிடப்படும் என்ற நம்பிக்கையில் முன்னெச்சரிக்கையாக டாஸ்மாக் ஊழியர்களை நேற்று முன்தினம் அலுவலகத்துக்கு வரவழைத்து அதிகாரிகள் அனைவரிடமும் குடிமகன்களிடம் வழங்கும் டோக்கன்களை வழங்கினர்.

இதில் இனி, வாரம் 7 நாட்களுக்கும் ஒவ்வொரு கலரில் டோக்கன் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவு சாதகமாக வந்தால் இன்று அல்லது நாளை டாஸ்மாக் திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரம் தெரிவித்துள்ளது.

Related Stories: