தமிழகத்தில் 10 டிஎஸ்பிக்கள் டிரான்ஸ்பர்

சென்னை: தமிழக டிஜிபி திரிபாதி நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு சிறப்பு பிரிவில் இருந்த முகேஷ் ஜெயகுமார் கரூர் சப் டிவிஷன் டிஎஸ்பியாகவும், கரூர் டவுன் சப் டிவிஷனில் இருந்த சுகுமார் கரூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகம் டிஎஸ்பியாகவும், திண்டுக்கல் போதை நுண்ணறிவு பிரிவு சிஐடி டிஎஸ்பியாக இருந்த அருள்மொழி அரசு புதுக்கோட்டை மாவட்ட இலுப்பூர் சப் டிவிஷன் டிஎஸ்பியாகவும், புதுக்கோட்டை நில அபகரிப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த தினேஷ்குமார் திருவாரூர் டிஎஸ்பியாகவும், தஞ்சை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த சுஜித் கோவை போலீஸ் பயிற்சி மையம் டிஎஸ்பியாகவும், சேலம் நகர வடக்கு குற்றப்பிரிவில் இருந்த உதவி கமிஷனர் சரவணன் கிருஷ்ணகிரி மாவட்ட டிஎஸ்பியாகவும்,

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை சப் டிவிஷன் டிஎஸ்பியாக இருந்த புகழேந்தி கணேஷ் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சப் டிவிஷன் டிஎஸ்பியாகவும், சென்னை தலைமையிடம்  க்யூ பிரிவு சிஐடி டிஎஸ்பியாக இருந்த அருள் சந்தோஷ் முத்து சென்னை மாதவரம் உதவி கமிஷனராவும், சென்னை மாநகர வடக்கு மண்டல  எஸ்பிசிஐடி டிஎஸ்பியாக இருந்த சிவராஜன் சென்னை  ஒருங்கிணைந்த குற்ற உளவுப்பிரிவு நிர்வாக பிரிவுக்கும், சென்னை ஒருங்கிணைந்த குற்ற உளவுப்பிரிவு நிர்வாக பிரிவில் இருந்த  காரியப்பா சென்னை மாநகர வடக்கு மண்டல எஸ்பிசிஐடி டிஎஸ்பியாகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: