மாற்றுத்திறனாளி வீரர்கள் மாரத்தான் ஓட்டம்

லண்டன்: கொரோனா பீதி காரணமாக வீட்டில் இருக்கும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள்,  அறக்கட்டளை ஒன்றுக்கு நிதி திரட்டுவதற்காக 260 மைல் (418 கி.மீ) தொலைவுக்கு மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள், கொரோனா பாதிப்பால் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ‘லார்ட்ஸ் டவேர்னர்ஸ்’ அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த அறக்கட்டளை புதிய,  இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் பணியில் 1950ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது. லண்டனிலிருந்து 260 மைல் தொலைவுக்கு நடைபெற உள்ள இந்த மாரத்தான் ஓட்டம், தினமும் 26 மைல் என  10 நாட்களில் நிறைவடையும்.

Related Stories: