திண்டுக்கல்லில் மது விற்பனைக்காக எஸ்.பி.யின் உத்தரவு காற்றில் பறக்கவிட்ட மதுவிலக்கு டி.எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மதுபானம் அதிக அளவில் விற்பனையாக வேண்டும் என்பதற்காக காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவை காவல்துறை அதிகாரி ஒருவரே காற்றில் பறக்கவிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குடைபிடித்து நிற்பவர்களுக்கு மட்டும் மதுபானம் வழங்க வேண்டும் என்பது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவு.

இதனால் திண்டுக்கல் சத்திரம் தெருவில் உள்ள அரசு மதுபான கடைக்கு குடை இல்லாமல் வந்தவர்களை நகர துணை கண்காணிப்பாளர் மணிமாறன் விரட்டியடித்தார். இதனால் டாஸ்மாக் கடை வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் அந்த வழியாக ரோந்து வந்த மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் பொன்னுசாமி மதுபான கடை கூட்டமில்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அங்கு பணியில் இருந்த காவலர்களை திட்டி குடை கொண்டு வராவிட்டாலும் பரவ இல்லை  என்று கூறி மது  வாங்க வந்தவர்களை அனுமதிக்குமாறு கூறியுள்ளார். இதனால் குடை இல்லமால் வந்த குடிமகன்கள் மகிழ்ச்சியுடன் மதுபானங்களை வாங்கி சென்றுள்ளனர். மதுபானம் அதிக அளவில் விற்பனை செய்வதற்காக காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவை காவல்துறை அதிகாரி ஒருவரே காற்றில் பறக்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories: