கொரோனாவை எதிர்த்து போராடுவோரை கவுரவிக்க இன்று நடக்கிறது புத்த பூர்ணிமா விழா; காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்பு

டெல்லி: இன்று நடைபெறவுள்ள புத்த பூர்ணிமா விழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். கபிலவஸ்து என்ற நாட்டில் மன்னனின் மகனான சித்தார்த்தர் முழு நிலவு நாளான வைசாகாவில் பிறந்தார். ஒரே மகன் என்பதால் உலகத் துன்பங்கள், கவலைகள் என எதுவும் தெரியாதவராக வளர்க்கப்பட்டார். தனது 29-வது வயதில் வெளி உலகைக் காண கிளம்பியவர் துன்பம் நிறைந்த உலக மக்களின் வாழ்க்கையைக் கண்டு அதிர்ந்து, துன்பங்களுக்கு காரணம் தேடி அலைந்தார். கயா என்னும் காட்டுப்பகுதியில் போதி மரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டுகள் தவம் செய்த சித்தார்த்தன், முடிவில் தனது பிறந்த நாளான அதே வைசாகா முழு நிலவு நாளில் ஞான ஒளியைப் பெற்று தனது கேள்விகளுக்கான பதிலைக் கண்டுபிடித்தார். மன்னரின் மகனாக அவதரித்து மக்களின் வாழ்விற்காக அனைத்தையும் துறந்த மகான் புத்தரின் அவதரித்த நாள் புத்த பூர்ணிமா, புத்த ஜெயந்தி அல்லது விசாக் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.

புத்த பூர்ணிமா விழா இந்தியாவின் பீகாரில் உள்ள புத்த கயாவிலும், உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள சாரநாத்திலும் இவ்விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமல்லாது. நேபாளம், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் புத்த பூர்ணிமாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், அதை எதிர்த்து போராடுவோரை கவுரவப்படுத்தும் விதமாக, புத்த பூர்ணிமா விழா இன்று கொண்டாடப்பபட உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார். விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, உரையாற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பௌத்த கூட்டமைப்புடன் இணைந்து மத்திய கலாச்சார அமைச்சகம் உலகெங்கிலும் உள்ள பௌத்த சங்கங்களின் அனைத்து தலைவர்கள் பங்கேற்கும் இந்த வீடியோ கான்பரன்சிங் நிகழ்வை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சி நேபாளத்தில் உள்ள புனித தோட்ட லும்பினி, இந்தியாவில் உள்ள மகாபோதி கோயில், புத்தகயா, முல்கந்தா குட்டி விஹாரா, சாரநாத், பரிநிர்வண ஸ்தூபம், குஷிநகர், புனித ப்ரதபத்தில் உள்ள ருவன்வேலி மகா சேயா, இலங்கையில் உள்ள பௌந்தநாத், சுயம்பு, நேபாளத்தில் நமோ ஸ்தூபம் மற்றும் பிற பிரபலமான பௌத்த தளங்களில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் முன்னணி பணியாளர்களுக்காக நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடியுடன் மத்திய கலாச்சார அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் மற்றும் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

Related Stories: