ஷார்ஜாவில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் 49 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து : 300 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

ஷார்ஜா: யுஏஇ எனப்படும் ஐக்கிய அரசு அமீரகத்தின் 3வது பெரு நகரமான ஷார்ஜாவில் உள்ள 49 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதில் குடியிருந்த 300 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளன.ஷார்ஜாவின் Al Nahda பகுதியில் அமைந்திருக்கும் Abbco Tower 49 மாடிகளைக் கொண்டது. தாஜ் பெங்களூரு ரெஸ்டாரண்ட்டுக்கு அடுத்ததாக இந்த 49 மாடி கட்டிடம் உள்ளது. இங்கு இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பற்றியது. காற்று பலமாக இருந்ததையடுத்து தீ மற்ற இடங்களுக்கும் தீவிரமாக பரவியது. தகவல் அறிந்து வந்த ஷார்ஜா தீயணைப்புப் படை வீரர்கள் 3 மணி நேரம் போராடி நெருப்பினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். துரிதமாக செயல்பட்ட மீட்பு மற்றும் தீயணைப்பு படையினர் 300க்கும் மேற்பட்டவர்களை காப்பாற்றினர். இதில் 12 பேருக்கு மட்டும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: