வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிருடன் இருக்கிறார் : 20 நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் பங்கேற்பு; உடல்நலம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி

சியோல் : வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் 20 நாட்களுக்கு பின்னர் பொது நிகழ்ச்சியில் தோன்றி தமது உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தலைநகர் பியாங்யாங் அருகே உரம் தொழிற்சாலையை கிம் ஜாங் உன் திறந்து வைத்த போது எடுக்கப்பட்ட 6 நிமிட வீடியோவை வட கொரிய அரசு வெளியிட்டுள்ளது. அப்போது கிம்மின் சகோதரி கிம் யோ ஜோங் உள்ளிட்ட வட கொரிய அரசின் முக்கிய தலைவர்கள் உடன் இருந்தனர். திரண்டு இருந்த மக்களின் ஆரவாரத்திற்கு இடையே பியாங்யாங் நகரத்தில் இருக்கும் சன்சோன் போஸ்பாடிக் உர தொழிற்சாலையை திறந்து வைத்தார். அங்கிருக்கும் அதிகாரிகளுடன் சில நிமிடம் அவர் உரையாடினார். பின் ரிப்பனை கட் செய்து கட்டிடத்தை திறந்து வைத்தார்.

ஆலையை திறந்து வைத்ததுடன் வட கொரிய அரசின் முக்கிய தலைவர்களுடன் கிம் ஜாங் உன் ஆலோசனையும் நடத்தியுள்ளார். இதையடுத்து கிம்முடன் இவ்வாறு இறுதியில் தொலைபேசியில் பேச போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வட கொரியாவை நிறுவிய கிம் சங்கின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்காததால் அதிபர் கிம் ஜாங் உன் உயிரிழந்துவிட்டதாக வதந்திகள் பரவியது. வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், கடந்த 11-ந் தேதிக்கு பிறகு வெளியுலகத்துக்கு வராத நிலையில், இதய அறுவை சிகிச்சையை தொடர்ந்து, அவர் இறந்துவிட்டார் என்றும், கோமா நிலையில் இருக்கிறார் என்றும்  உறுதிபடுத்தப்படாத செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் அண்டை நாடான தென்கொரியா இந்த செய்திகளை மறுப்பதோடு, கிம் நலமாக இருப்பதாக தொடர்ந்து கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: