துபாயில் தற்கொலை செய்த தொழிலதிபர் ஜாய் அரக்கல் உடல் தனி விமானத்தில் கொண்டு வரப்பட்டு அடக்கம்: 20 பேர் மட்டுமே பங்கேற்பு

திருவனந்தபுரம்: துபாயில் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட கேரளாவை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ஜாய் அரக்கல் உடல் மானந்தாவடி சர்ச்சில் உள்ள கல்லரை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கேரளாவின் வயநாடு மாவட்டம் மானந்தாவடி பகுதியை சேர்ந்தவர் ஜாய் அரக்கல் (54). பிரபல தொழிலதிபரான இவர் துபாயில் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகம், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, கப்பல் சேவை,தொலைத் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு கப்பல் ஜாய் என்ற பெயரும் உண்டு. இவர் மானந்தவாடியில் பல ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட பங்களா கட்டியுள்ளார்.

இது கேரளாவிலேயே மிக பெரிய வீடாக கருதப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்தான் இந்த பங்களாவில் இவர் குடியேறினார்.

இவர் துபாயில் இருந்து அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து சமூக சேவைகளும் செய்து வந்தார். 4 மாதங்களுக்கு முன்புதான் இவர் துபாய் சென்றார். இந்நிலையில், கடந்த வாரம் இவர் தங்கியிருந்த பிஸ்னஸ் பே என்ற கட்டிடத்தின் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கடும் நிதி நெருக்கடி காரணமாக இவர் தற்கொலை செய்ததாக துபாய் போலீசார் தெரிவித்தனர்.

கொரோனா காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் உடலைக் கேரளா ெகாண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் உடல் நேற்று முன்தினம் இரவு தனி விமானம் மூலம் கேரளா கொண்டு வரப்பட்டது. நேற்று காலை 8 மணியளவில் மானந்தவாடி செயின்ட் ஜோசப் ஆலய கல்லரை ேதாட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் மனைவி செலின், மகன்அருண் ஜாய், மகள் ஆஷ்லி ஜாய் உட்பட 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: