சாராயம் காய்ச்சிய 2 வாலிபர்கள் கைது

ஸ்ரீபெரும்புதூர்:ஸ்ரீபெரும்புதூர் அருகே சோமங்கலம் அடுத்த எருமையூர் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யவதாக சோமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் சௌந்தரராஜன் தலைமையில் போலீசார் எருமையூர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, எருமையூர் சமுதாயக்கூடம் பின்புறம் முட்புதரில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போடப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக, அதேபகுதியை சேர்ந்த விக்கி (எ) பிரகாஷ் (26), பழவந்தண்டலத்தை சேர்ந்த அருண்குமார் (29) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை, ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சாராய ஊறலை அழித்தனர்.

Related Stories: