விமானம், கப்பல் மூலம் வளைகுடாவில் உள்ள தமிழர்களை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும்: மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை: வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களை கப்பல், விமானம் மூலம் மத்திய அரசு அழைத்து வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  வளைகுடா நாடுகளில் ஏறத்தாழ 85 லட்சம் இந்தியர்கள், குறிப்பாக தமிழகம், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.  எனவே, இந்திய தொழிலாளர்களை முறையான மருத்துவ பரிசோதனை செய்து  அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு தெரிந்த பிறகு தனி விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு திரும்ப அனுப்பவேண்டும் என்று ஐக்கிய அரபு  அமீரகத்துக்கான இந்திய தூதரிடம் முறையிட்டுள்ளனர்.

ஆனால் அவரோ,  இப்போது அனுப்ப முடியாது என்று கூறியது வளைகுடா பகுதியில் வாழும் இந்திய மக்களை அதிர்ச்சியில் உறையவைத்திருக்கிறது. மற்ற நாடுகளில் இருந்து அழைத்து வந்த மத்திய பாஜ  அரசு, வளைகுடா நாட்டில் வாழுகிற இந்திய தொழிலாளர்களை தமிழகம் அழைத்துவர மறுப்பது ஏன்?.  அவர்களை பிரதமர் மோடியின் கவனத்திற்கு  இப்பிரச்னையை தமிழக முதல்வர் கொண்டு  சென்று  ஏர் இந்தியா விமானங்கள், கடற்படை கப்பல்கள் மூலம் அவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: