184 நாடுகள் நரகத்திற்கு செல்ல சீனா வழிவகுத்தது: அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாள்தோறும் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றார். நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவலை ஆரம்பக் கட்டத்திலேயே சீனா தடுக்க தவறியது தான் 184 நாடுகள் நரகத்திற்கு செல்ல வழிவகுத்துள்ளது. நோய்தொற்றான கண்ணுக்கு தெரியாத எதிரியை உலகளாவிய அளவில் சீனா பரப்பியுள்ளது. அதற்கு எதிரான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. நோய் தொற்று காரணமாக ஏற்பட்ட இழப்புக்களுக்காக 140மில்லியன் டாலரை இழப்பீடாக சீனாவிடம் கேட்பதற்கு ஜெர்மனி திட்டமிட்டுள்ளது.

ஆனால், சீனாவில் நோய் தொற்றால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்காக அதைவிட இரட்டிப்பு தொகையை சீனாவிடம் அமெரிக்கா கோர முடியும். 184 நாடுகளுக்கு பரவ சீனா தான் காரணம் என நான் அடிக்கடி கூறுவதை நீங்கள் கேட்கிறீர்கள். இது நம்புவதற்கு கடினமாக தான் இருக்கும். ஆனால் அது தான் உண்மை. ஆரம்ப கட்டத்திலேயே சீனா நோய் தொற்றை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் இன்று 184 நாடுகள் நரக வேதனையை அனுபவிக்கின்றன என்றார்.

Related Stories: