40% வருமான வரி உயர்த்த பரிந்துரை ஐஆர்எஸ் அதிகாரிகள் 3 பேருக்கு நோட்டீஸ்: மத்திய நேரடி வரிகள் வாரியம் அதிரடி

புது டெல்லி: 3 ஐஆர் எஸ் அதிகாரிகளுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் குற்றப்பத்திரிகை அனுப்பியுள்ளது.  கொரோனா பாதிப்புக்கு உதவும் வகையில் பல்வேறு வகையில் மத்திய அரசு நிதி திரட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய வருவாய் துறை அதிகாரிகள் (ஐஆர்எஸ்) சங்கம் சார்பில் வருமான வரியை உயர்த்துவது தொடர்பாக பரிந்துரை செய்திருந்தனர். இதில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருவாய் ஈட்டும் நபர்களுக்கு கூடுதலாக 40 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தனர். இந்த பரிந்துரை சமூக வலைதளங்களில் கசிந்து விட்டது.  இதனால் இந்த அறிக்கை தயாரித்த 50 இளம் அதிகாரிகளை தவறாக வழிநடத்தியதாக கூறி இது குறித்து விளக்கம் அளிக்க கேட்டு மத்திய நேரடி வரிகள் வாரியம் பிரசாந்த் பூஷண், பிரகாஷ் துபே, சஞ்சய் பகதூர் ஆகிய 3 ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Related Stories: