கபசுர குடிநீர் மூலம் கொரோனா பரவாமல் தடுப்பு: சித்த மருத்துவர் ஜெயபிரகாஷ் நாராயணன் பேட்டி

சென்னை: கபசுர குடிநீரை பொதுமக்கள் முன்கூட்டியே குடித்ததால் கொரோனா தொற்று அதிகம் பராவமல் தடுக்கப்பட்டுள்ளது என்று மூத்த சித்த மருத்துவர் ஜெயபிரகாஷ் நாராயணன் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மார்ச் 6ம் தேதி ஆயுஷ் துறை சார்பில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருந்துகளை பரிந்துரை செய்யப்பட்டும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.  தற்போது நவீன மருத்துவத்துடன் கபசுரக் குடிநீரையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து அது சம்பந்தமாக பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தது. இதையடுத்து பொதுமக்கள் அவர்களாகவே கபசுரகுடிநீரை சித்தா, ஆயுர்வேதா மருந்துக் கடைகளில் வாங்கி குடிக்க ஆரம்பித்தனர். அதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கபசுரகுடிநீர் கசாயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

ஆனால் தமிழக அரசு கபசுரகுடிநீரை பொதுமக்களுக்கு வழங்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் பொதுமக்கள் அவர்களாகவே தங்களுடைய உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் வாங்கி குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். அதனால் சென்னையில் மக்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தாலும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டெங்கு காய்ச்சல் பரவிய போது எவ்வாறு தமிழக அரசு சார்பில் சித்த மருத்துவர்கள், மருந்தாளுநர்கள் உதவியோடு தமிழகம் முழுவதும் ஆட்டோ மூலம் ெபாதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டதையடுத்து டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது. அதைப்போன்று கபசுர குடிநீரையும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். மேலும் ஆயுஷ் துறை பரிந்துரை செய்த நேரத்திலேயே தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீரை வழங்கியிருந்தால் நம்முடைய மாநிலத்தில் கொரோனா தொற்றே இல்லாத மாநிலமாகவோ, கட்டுப்படுத்தப்பட்ட மாநிலமாகவோ கொண்டு வந்திருக்க முடியும்.

பொதுமக்களோ பத்திரிகைகளில் வந்த செய்தியின் அடிப்படையில் கபசுரகுடிநீரை வாங்கி குடித்ததால் தான் சென்னையில் இந்த அளவுக்கு கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பத்திரிகை செய்தியின் அடிப்படையில் கபசுர குடிநீரை மக்கள் பயன்படுத்தியதால் அண்ணாநகர், வில்லிவாக்கம், கோயம்பேடு, அமைந்தகரை, புரசைவாக்கம் போன்ற பகுதிகளில் கொரோனா தொற்று ஓரளவுக்கு பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் ராயபுரம், திருவிகநகர், தண்டையார் பேட்டை போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கபசுரகுடிநீரை வழங்கியிருந்தால் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையை குறைந்திருக்க முடியும். இவ்வாறு டாக்டர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் கூறினார்.

Related Stories: