2ம் உலகப்போருக்கு பின் முதல்முறை ஸ்பெல்லிங் பீ போட்டி ரத்து

வாஷிங்டன்: இந்திய அமெரிக்கர்கள் ஆதிக்கம் செலுத்தும் ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.  ஆங்கில வார்த்தைக்கான எழுத்துக்களை கூறும் ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டி, கடந்த 1925ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் நடத்தப்பட்டு வருகிறது. 2ம் உலகப் போர் காரணமாக 1943, 1945ம் ஆண்டுகளில் மட்டும் இப்பாட்டி நடத்தப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக இந்த போட்டியில் அமெரிக்காவில் வாழும் இந்திய சிறுவர்கள் வெற்றிக்கனியை ருசித்து வருகின்றனர்.

இந்நிலையில், உலகையை அச்சுறுத்தியுள்ள கொரோனா காரணமாக, இந்த ஆண்டு இப்போட்டி நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது

தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான இப்போட்டி, அடுத்தாண்டு ஜூன் 1ம் தேதி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக போட்டியை நடத்தும் பீ அமைப்பின் நிர்வாக இயக்குனர் பெய்கே கிம்பள் கூறுகையில் ‘`இந்த ஆண்டுக்கான ‘ஸ்பெல்லிங் பீ’ இறுதிப் போட்டி, மே 24ல் நடத்த திட்டமிட்டு இருந்தது. கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்கள் அதிகளவில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், இது ரத்து செய்யப்படுகிறது,’’ என்றார்.

Related Stories: