டாக்டர்களுக்கு வீட்டில் உணவு தயாரிக்கிறார் ராகினி திவேதி

சென்னை: தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான நிமிர்ந்து நில் என்ற படத்தில், ஜெயம் ரவி ஜோடியாக நடித்தவர் ராகினி திவேதி. ஏராளமான கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து, தங்கள் உயிரை பணயம் வைத்து போராடும் டாக்டர்களுக்கு மக்கள் பெருமளவில் உதவி செய்து வருகிறார்கள். தற்போது அந்த வரிசையில் சேர்ந்துள்ள ராகினி திவேதி, பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் தினமும் 150 டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு உணவு தயார் செய்கிறார். உணவு தயாரித்தல் மற்றும் விநியோகிக்கும் பணியில் நேரடியாக ஈடுபட்டுள்ள அவர், தனக்கு துணையாக சில உதவியாளர்களை நியமித்துள்ளார். வீட்டில் உணவு தயாரித்து முடித்ததும், உடனே அதை ஒரு வாகனத்தில் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் கொண்டு சென்று வழங்கி வருகிறார்.

Related Stories: