ஒற்றுமையின் உச்சம்; கொரோனாவை தடுக்க மருத்துவ பொருட்களை அனுப்பிய பிரதமர் மோடிக்கு கஜகஸ்தான் அதிபர் காசிம் நன்றி

டெல்லி: கஜகஸ்தானுக்கு மருத்துவ பொருட்களை அனுப்பிய பிரதமர் மோடிக்கும் அந்நாட்டு அதிபர் நன்றி தெரிவித்துள்ளார். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே,  உயிர்க்கொல்லி கொரோனா வைரசை எதிர்த்து போராடி வரும் நட்பு நாடுகளுக்கு, ஹைட்ராக்சிக்ளோரோக்வின் மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில், மருத்துவ பொருட்களை அனுப்பி வைத்ததற்காக, இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் கஜகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவ் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கஜகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த, கஜகஸ்தானுக்கு மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியதற்காக, இந்திய அரசுக்கும் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடிக்கும் மனமார்ந்த நன்றி. இது நட்பு, ஒற்றுமையின் உச்சம் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: