காதல் திருமணம் செய்த தம்பதி ஊரடங்கில் வசூல் வேட்டை நடத்திய பெண் இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்

திருவாரூர்: திருவாரூரில் ஏட்டு, அவரது மனைவியான இன்ஸ்பெக்டர் ஆகியோர் ஊரடங்கின்போது கடைகளில் வசூலில் ஈடுபட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.                 

நாகை மாவட்டம் கொள்ளிடத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம் (46). போலீஸ் ஏட்டான இவர், அதே பகுதியை சேர்ந்த பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரியா தற்போது சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். சீர்காழி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வந்த சோமசுந்தரம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சாராய கடத்தல் வழக்கில் தொடர்பு இருந்ததையடுத்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

இதையடுத்து நீதிமன்றம் மூலம் மீண்டும் பணியில் சேர்ந்த சோமசுந்தரம், கடந்த 8 மாதத்திற்கு முன் திருவாரூர் அடுத்த எரவாஞ்சேரி ஸ்டேசனில் ஏட்டாக பணியில் சேர்ந்தார். கடந்த பிப்ரவரி 25ம் தேதி முதல் மருத்துவ விடுப்பில் சென்ற சோமசுந்தரம், அதிகாரிகள் உத்தரவிட்டும் பணிக்கு வராமல் விடுமுறையில் இருந்து வந்தார். கொரனோ வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியையொட்டி சோமசுந்தரத்தின் மனைவி இன்ஸ்பெக்டர் பிரியாவுக்கு சீர்காழி முதல் திருவெண்காடு வரை ரோந்து பணி வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சோமசுந்தரம், திருவெண்காடு பகுதி கடைகளில் இன்ஸ்பெக்டர் பிரியா பெயரை கூறி அவர் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து வர்த்தகர்கள் புகாரின்பேரில் தஞ்சை டிஐஜி லோகநாதனுக்கு புகார் சென்றது. டிஐஜி பரிந்துரையின்பேரில், சோமசுந்தரத்தை திருவாரூர் எஸ்பி துரை நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதேபோல் இன்ஸ்பெக்டர் பிரியாவை, டிஐஜி சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார். இது, போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: