கொரோனா சிக்கலுக்கு அறிவியலாளர்கள், பொறியாளர்கள் விரைவில் தீர்வு காண வேண்டும் : ராகுல்காந்தி ட்வீட்

டெல்லி : கொரோனா வைரஸ் பரவல் மிகப்பெரிய சவால் என்றும், இத்தகைய சிக்கல்களுக்குத் தீர்வு கண்டுபிடிப்பதற்கு இது ஒரு வாய்ப்பு என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கி வரும் கொரோனா வைரஸ், ஆர்என்ஏ வகை வைரஸ் ஆகும். இதனால் இதை டெஸ்ட் செய்வதும், அதற்கு மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிப்பதும் மிக மிக கடினமாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி இரண்டு நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில் ஊரடங்கு கொரோனா பரவலை நிறுத்தி வைக்க உதவுமே ஒழியக் கட்டுப்படுத்த உதவாது எனத் தெரிவித்திருந்தார். இதை விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்தார்.இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளார், அதில் கொரோனா தொற்றுநோய் மிகப்பெரிய சவால் எனக் குறிப்பிட்டுள்ளார்.இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி நமது அறிவியலாளர்கள், பொறியாளர்கள், வல்லுநர்களைக் கொண்டு இந்தச் சிக்கலுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: