சென்னை: ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளில் நடைபெற இருந்த சர்வதேச அளவிலான ஃபிஸ்ட்பால் போட்டிகள் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. சில போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. இந்த ஆண்டு ஜூலை 2-4 தேதிகளில் இத்தாலியில் நடைபெற இருந்த ஆண்களுக்கான, யூரோ ஃபிஸ்ட்பால் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 24-26 தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் ஜெர்மனியில் நடைபெற உள்ள ஐரோப்பிய இளையோர் கோப்பை, பிரேசிலில் நடைபெற இருந்த பான் அமெரிக்கன் சாம்பியன்ஷிப், நவம்பர் மாதம் சீனாவில் நடைபெற இருந்த யு-16 சாம்பியன்ஷிப், உலக பெண்கள் சாம்பியன்ஷிப் ஆகியவை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.