மத்திய கிழக்கு ஆசியாவில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ராகுல் கோரிக்கை

புதுடெல்லி: `மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பால் சிக்கி தவிக்கும் இந்திய தொழிலாளர்களை திரும்ப அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.   இந்தியா மட்டுமின்றி சவுதி அரேபியா, ஏமன், குவைத், ஈரான், ஈராக் உள்ளிட்ட மத்திய கிழக்கு ஆசியா நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு வேலையின்றி தவிக்கும் இந்திய தொழிலாளர்களை தாய் நாட்டுக்கு திரும்ப அழைத்து வர மத்திய அரசுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

 இது தொடர்பாக ராகுல் தனது டிவிட்டரில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘கொரோனா தொற்று பாதிப்பால் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல ஆயிரம் இந்தியர்கள் அங்கு ேவலையின்றி தவித்து வருகின்றனர். அவர்கள் இந்தியா திரும்புவதிலும் சிக்கல் நிலவுகிறது. எனவே, மத்திய அரசு அங்கு சிக்கி தவிக்கும் நமது சகோதர, சகோதரிகளுக்கு தேவையான உதவிகள் செய்து அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர விமானங்களை ஏற்பாடு செய்து தரவேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: