புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும்; அரசின் விதிமுறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக இருங்கள்...நடிகர் ரஜினிகாந்த் டுவிட்

சென்னை: அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடித்து பாதுகாப்பாக இருங்கள் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட 205 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 10,363 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 339 பேர் உயிரிழந்த நிலையில், 1036 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இன்று வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும், கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், இன்று நாட்டு மக்களுடன் 4-வது உரையாற்றிய, பிரதமர்  நரேந்திர மோடி, நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக அதிரடியாக அறிவித்தார். இந்நிலையில், கொரோனா தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும். இந்த துயரமான நேரத்தில் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள். அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடித்து பாதுகாப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். #இதுவும்கடந்துபோகும் என்ற ஹெஷ்டெக்கையும் பதிவிட்டுள்ளார்.

Related Stories: