தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு

டெல்லி: டெல்லியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் இன்று மாலை 5.45 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்க அதிர்வுகள் நொய்டா, குர்கான், காசியாபாத், பரிதாபாத், கிரேட்டர் நொய்டா ஆகிய இடங்களில் உணரப்பட்டன. இது ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போது வணிக வளாகங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின மேலும் இந்த நிலநடுக்கம் கிழக்கு டெல்லியை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் செய்வதறியாது தவித்துள்ளனர்.

144 தடை உத்தரவினால் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் வெளியே வருவதற்கு முடியாமல் தவித்துள்ளனர். ஆனால் நில நடுக்கம் ஏற்படுத்திய அச்சத்தின் காரணமாக ஊரடங்கையும் மீறி மக்கள் பலர் வீதிகளில் வந்து குழுமியுள்ளனர். இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலும் சில பகுதிகளில் மீட்பு பணிகளை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கம் குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் ரவிந்த் கெஜ்ரிவால்; டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அனைவரும் நலமாக இருப்பார்கள் என நம்புகிறேன். அனைவரின் நலனுக்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்’ என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: