ஸ்ரீபெரும்புதூரில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு என ஏமாற்றி போலி மருந்துகள் விற்பனை :கம்பி எண்ணும் பீடா கடைக்காரர்

காஞ்சிபுரம் : கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு என ஏமாற்றி போலி மருந்துகளை விற்பனை செய்து வந்த நபரால் ஸ்ரீபெரும்புதூர் கடைவீதியில் பரபரப்பு ஏற்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கடைவீதியில் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்து விற்பனை செய்வதாக கூறிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இந்திரஜித் மண்டல் (வயது 44) என்பவரால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில், சளி மற்றும் காய்ச்சலுக்குண்டான மருந்துகளை தூளாக்கி பேப்பரில் மடித்து வைத்து ஏமாற்றி விற்பனை செய்ய முயற்சி செய்தார் என்பதும் இவர் மாம்பாக்கம் பகுதியில் பீடா கடை வைத்துள்ளவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.அவர் வைத்திருந்த போலி கொரோனா மருந்து பாக்கெட்களை பறிமுதல் செய்து அவரை ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இதனால் ஸ்ரீபெரும்புதூர் கடைவீதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: