சிறுதுளி பெருவெள்ளம்; கொரோனா நிவாரண நிதிக்காக ரூ4800ஐ வழங்கிய மாணவர்கள்

கும்பகோணம்: கும்பகோணம் மகாமகம் குளம் கிழக்கு வீதியில் வசிப்பவர் ஓம்பிரகாஷ்(35). கோயில் அர்ச்சகர். இவரது மகன் சரபேஷ்(8), மகள் சாட்சிதா(5). 3ம் வகுப்பு, 1ம் வகுப்பு படிக்கின்றனர். இக்குழந்தைகள் தங்கள் பெற்றோர் மற்றும் வீட்டிற்கு வந்து செல்லும் உறவினர்கள் கொடுக்கும் தொகையை உண்டியலில் சேர்த்து வைப்பது வழக்கம். அந்த வகையில் இருவரும் சேர்ந்து ரூ.4800 சில்லரை காசுகளை சேர்த்து வைத்திருந்தனர்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பை ஒட்டி முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்களிடம் இருந்து உதவி கேட்டுள்ளனர். அதனடிப்படையில் 2 குழந்தைகளும் தங்களது சேமிப்பு தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க விருப்பம் தெரிவித்தனர். அதன்படி தனது பெற்றோருடன் தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு பணியில் இருந்த ஆர்டிஓ வீராசாமியிடம் சேமிப்பு தொகையை வழங்கினர்.

Related Stories: