சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் ஆண் யானை: சிகிச்சை அளிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்திய மங்களம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பெரும்பள்ளம் அணை நீர்த்தேக்க பகுதியில் கடந்த சில நாட்களாக 30வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உடல்நலம் குன்றிய நிலையில் அந்த பகுதியில் நடமாடி வந்துள்ளது. அங்குள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை மேய்வதும் மீண்டும் நீர்த்தேக்க பகுதிக்கு வந்து தண்ணீர் அருந்தியும் நடமாடி வந்தது.

மேலும் அங்கு மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளையும் துரத்தி வந்தது. மிகவும் உடல்நலம் குன்றி நடமாடி வந்த ஆண் யானை இன்று காலை திடீரென அணையின் நீர்த்தேக்க பகுதியில் தன்னால் எழ முடியாமல் திடீரென படுத்துவிட்டது. உடனடியாக கிராமமக்கள் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சத்தியமங்கலம் வனச்சரகர் பழனிச்சாமி, கால்நடை மருத்துவர் சதா சிவம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து அந்த ஆண் யானைக்கு சிகிச்சை அளிக்க தொடங்கியுள்ளனர். யானைக்கு குளுக்கோஸ், மருந்து மற்றும் குடிப்பதற்கு தண்ணீர் மற்றும் உணவருந்த சில பொருட்களையும் கொடுத்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கை, கால்களை அசைத்து வரும் ஆண் யானை எழ முடியாமல் அந்த இடத்திலேயே படுத்துள்ளது. இருப்பினும் வனத்துறையினர் மாற்றம் கால்நடை துறையினர் யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

The post சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் ஆண் யானை: சிகிச்சை அளிக்கும் பணியில் வனத்துறை தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: