அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி இரவு வரை திறந்திருந்த கடைகளுக்கு சீல்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி இரவு வரை திறந்து வைத்திருந்த, 3 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கொரோனா வைரசின் அச்சுறுத்தல் காரணமாக, 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனால், அத்தியாவசிய தேவைகளான காய்கறி, மளிகை கடை ஆகியவைகள்  பிற்பகல் 1 மணி வரை நடத்தி கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனி மற்றும் தாராட்சி பகுதிகளில் இரவு 8 மணி வரை மளிகை கடைகள் இயங்கி வருவதாக திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதுபோன்று விதிகளை மீறி திறக்கப்பட்டுள்ள கடைகளுக்கு சீல் வைக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் சூளைமேனி கிராமத்தில் ஆசாராம் (35), முத்துகிருஷ்ணன் (40) ஆகியோரின் மளிகை கடைகளுக்கும்,  தாராட்சி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (33) என்பவரின்  மளிகை கடை என 3 மளிகை கடைகளும்  இரவு 8 மணி வரை இயங்கியதாக   ஊத்துக்கோட்டை தாசில்தார் சீனிவாசன் சீல் வைத்தார். அப்போது, வருவாய் ஆய்வாளர் யுகேந்தர் உடன் இருந்தார்.

Related Stories: